விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பிரஷிப்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டது அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த கையோடு பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்த நிலையில் தான் இப்போட்டியானது கைவிடப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் சில சாதனைகளையும் ப்டைத்து அசத்தியுள்ளார். அதன்படி ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் அவர் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், அவர் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஷிகர் தவான், ஃபாஃப் டு பிளெசிஸ், டெவன் கான்வே ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அதிகமுறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர செவாக், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் தொடர்ச்சியாக 5 முறை 50+ ஸ்கோரை அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பிரப்ஷிம்ரன் சிங் மட்டுமே இதில் தேசிய அணிக்காக விளையாடாத ஒரே வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now