
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் கடந்ததன் மூலம், இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியில் பிரப்சிம்ரன் சிங் விளாசிய ஒரு சிக்ஸர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் கேகேஆர் அணி தரப்பில் இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை சுனில் நரைன் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட பிரப்ஷிம்ரன் சிங் திடீரென இடது கை பேட்டிங்கிற்கு மாறியதுடன் டீப் கவர் திசையை நோக்கி இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.