Advertisement

பயிற்சி ஆட்டம் : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 20, 2021 • 15:40 PM
Practice Match: Indians have won the toss and have opted to bat
Practice Match: Indians have won the toss and have opted to bat (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இத்தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ளது.

Trending


அதன்படி டர்ஹாமில் இன்று நடைபெறும் முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். அதேசமயம் அஸ்வின், இஷாந்த சர்மா ஆகியோருக்கு பதிலாக அக்சர் படேல், ஷர்தூல் தாக்கூர் இடம்பிடித்துள்ளனர். 

இந்தியா (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா (கே), மாயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆக்சர் படேல், ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

கவுண்டி லெவன் அணி: ஜாக் சேப்பல், ராபர்ட் யேட்ஸ், ஜேம்ஸ் பிரேசி, ஹசீப் ஹமீத், ரெஹான் அகமது, ஜேம்ஸ் ரீவ், வில் ரோட்ஸ் (கே), ஜேக் லிபி, லிண்டன் ஜேம்ஸ், கிரேக் மைல்ஸ், லியாம் பேட்டர்சன்-வைட், ஈதன் பாம்பர், ஜாக் கார்சன்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement