
Prasidh Unwanted Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேமி ஸ்மித் 24 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமத்தில் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்இத் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன் இரட்டை சதத்தை நோக்கியும் நகர்ந்து வருகின்றனர். மேலும் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 300 ரன்களை எட்டியுள்ளது.