Advertisement

INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Advertisement
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 10, 2025 • 07:05 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அயர்லாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 10, 2025 • 07:05 PM

அதன்படி காளமிறங்கிய அயர்லாந்து அணியில் சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா ஃபோர்ப்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய ரய்மெண்ட் ஹெய் 5 ரன்களிலும், ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 9 ரன்களிலும், லாரா டெலானி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 56 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேபி லூயிஸ் - லியா பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Trending

இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்து விளையாடிய லியா பாலும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டிய நிலையில், லியா பால் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேபி லூயிஸ் 92 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியில் குல்டர் ரெய்லி மற்றும் அர்லீன் கெல்லி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அர்லீன் கெல்லி 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பிரதிகா ராவல் மற்றும் தேஜல் ஹசாப்னிஸ் இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

இதில் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரதிகா ராவல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 89 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேஜல் ஹசாப்னிஸ் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 34.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement