
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக 2020 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா, 2022 காமன்வெல்த் போட்டிகளின் இறுதிப்போட்டியிலும் தங்கப் பதக்கத்தை பறித்து தோல்வியை கொடுத்தது. எனவே சொந்த மண்ணாக இருந்தாலும் இந்தியாவை நிச்சயம் இத்தொடரில் ஆஸ்திரேலியா தோற்கடிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்றால் மிகையாகாது.
மறுபுறம் என்ன தான் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா போன்ற தரமான வீராங்கனைகள் இருந்தாலும் பெரிதளவில் வெற்றிகளை ஈட்டமுடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் இத்தொடரில் ஓரிரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வென்றால் கூட அது பாராட்டுக்குரிய செயல்பாடாக இருக்கும்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்காக நிறைய உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த வீராங்கனையான மெக் லென்னிங் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.