
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் 31 தேதி குஜராத் மாநில அகமதாபாத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது . இதன் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியினரும் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியினரும் மோத உள்ளனர்.
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும். இந்தப் போட்டிகளில் சர்வதேச வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கட் லீக் போட்டிகளிலேயே மிகச் சிறந்ததும் மிகப் பிரம்மாண்டமானது ஐபிஎல் தொடர்களாகும்.
தற்போது ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தொடங்க இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்ட போது ஆஸ்திரேலியா லெஜன்ட் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அந்த அணி . ஆயினும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது