
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மஹாராஷ்டிரா அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான மஹாராஷ்டிரா ரஞ்சி அணியின் கேப்டனாக அங்கித் பாவனே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அங்கித் அணியை வழிநடத்தவுள்ளார். இருப்பினும் இந்த ரஞ்சி கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சாதாரண வீரராக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, மற்று அணியில் இருந்து வந்த பிரித்வி ஷா, ஜலஜ் சக்சேனா உள்ளிட்டோருக்கும் மஹாராஷ்டிரா அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அறிமுக வீரர் பிரதீப் தாதேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, முகேஷ் சௌத்ரி, அர்ஷின் குல்கர்னி, சித்தார்த் மாத்ரே உள்ளிட்ட வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.