இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்காக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் இஷான் கிஷான், துருவ் ஜூரெல், பிரஷித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் ஆகியோரும் இடம்பிடித்துள்ளன.
அதேசமயம் இந்த அணியில் இடம்பிடித்திருக்கும் துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத பட்சத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இரானி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியையும் மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே அணியை வழிநடத்தும் நிலையில், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், ஷர்தூல் தாக்கூர், முஷீர் கான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசம்யம் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், சர்ஃப்ராஸ் கான்*, ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர், சித்தன் அத்தாத்ராவ், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஹிமான்ஷு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, முகமது ஜூனேத் கான், ராய்ஸ்டன் டயஸ்.
Win Big, Make Your Cricket Tales Now