
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொட்த்தனர். இதில் பிரியன்ஸ் ஆர்யா இன்ற போட்டியின் முதல் பந்தில் இருந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் அபாரமாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்திய நிலையில், மறுமுனையில் களமிரங்கிய நேஹல் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷஷாங் சிங்கும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார்.