
PSL 2021: Bowlers help United pick up fifth consecutive win (Image Source: Google)
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஷான் மசூத் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 59 ரன்களில் மசூத் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 20 ஓவர்களில் முல்தான் சுல்தான்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. யுனைடெட் அணி தரப்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.