Advertisement

PSL 2023: பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லாகூர் கலந்தர்ஸ்!

பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி வெற்றிபெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

Advertisement
PSL 2023: A brilliant team effort has taken Lahore Qalandars through to the final of PSL 8!
PSL 2023: A brilliant team effort has taken Lahore Qalandars through to the final of PSL 8! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2023 • 11:41 AM

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2023 • 11:41 AM

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சைம் அயூப் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் கொஹ்லர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்தார். 

Trending

பின்னர் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த முகமது ஹாரிஸ் 54 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் பனுகா ராஜபக்ஷா 25 ரன்களைச் சேர்த்து உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. லாகூர் அணி தரப்பில் ரஷித் கான், ஸமான் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஃபகர் ஸமான் 6, அஹ்சன் பாட்டி 15, அப்துல்லா ஷஃபிக் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிர்ஸ் தாஹிர் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்பின் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம் பில்லிங்ஸ் 28 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 23  ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த டேவிட் வைஸ் - ஷாஹீன் அஃப்ரிடி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லகூர் கலந்தர்ஸ் அணி பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement