
PSL 2023: A Clinical Perfomance by Zalmi bowler at pindi! (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 29 ஆவது ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலபாரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய பெஷாவர் அணியில் சைம் அயூப் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் - பனுகா ராஜபக்ஷ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்தினார் .
அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்ஷா 41 ரன்கலில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கொஹ்லர் காட்மோர் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ஹரிஸும் 79 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.