
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும்ம் 4ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றான. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீர ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷர்ஜில் கான் - ஹைதர் அலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ஷர்ஜில் கான் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையில் ஹைதர் அலி அரைசதம் கடந்த கையோடு 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் இமாத் வாசிம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.