PSL 2023: முகமது ஹாரிஸ் அரைசதம்; லாகூருக்கு 172 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சைம் அயூப் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ஹாரிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Trending
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் கொஹ்லர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த முகமது ஹாரிஸ் அரைசதம் கடந்தார்.
பின்னர் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த முகமது ஹாரிஸ் 54 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் பனுகா ராஜபக்ஷா 25 ரன்களைச் சேர்த்து உதவினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. லாகூர் அணி தரப்பில் ரஷித் கான், ஸமான் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now