
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11அவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - கேப்டன் முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவனெ உயர்ந்தது.
பின் 33 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளால் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வந்த ரிஸ்வான் 60 பந்துகளில் தனது இரண்டாவது பிஎஸ்எல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் ரைலி ரூஸோவ் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.