Advertisement

PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!

பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
PSL 2023: Multan Sultans finishes off 210 on their 20 overs!
PSL 2023: Multan Sultans finishes off 210 on their 20 overs! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 17, 2023 • 08:24 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரி 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 17, 2023 • 08:24 PM

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் முசூத் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - ரைலீ ரூஸொவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் அணியின் ஸ்கோரை மாளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

Trending

அதன்பின் 42 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 66 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரூஸொவுடன் இணை டேவிட் மில்லரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினார். இதற்கிடையில் ரைலீ ரூஸோவ் 35 பந்துகளில் 12 பவுண்டர், 2 சிக்சர்கள் என 75 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் பொல்லார்டும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்களைச் சேர்த்தார். டேவிட் மில்லர் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்தது. பெஷாவர் ஸால்மி சல்மான் இர்ஷாத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement