பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதில் இன்றூ நடைபெற்றுவரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது அமீரின் முதல் ஓவரிலேயே முகமது ஹாரிஸ் மற்றும் கேப்டன் பாபர் பாபர் ஆசாம் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் அயுப்பும் ஒரு ரன் எடுத்த நிலையில் முகமது அமீரிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹசீபுல்லா கான் - டாம் கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் சரிவிலிருந்து உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தில் ஹசீபுல்லா 28 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.