
PSL 2023: Sikandar Raza's fifty helps Lahore Qalandars finishes off 148-10! (Image Source: Google)
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
இதில் நட்சத்திர வீரர்களான ஃபகர் ஸமான் 4, மிர்ஸா தாஹிர் 2, அப்துல்லா ஷஃபிக் 15, சாம் பில்லிங்ஸ் 2, ஹுசைன் தாலத் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 50 ரன்களுக்கே லாகூர் கலந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.