
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பேஷவர் ஸால்மி அணி, இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பேஷாவர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 10 ரன்களிலும், சாய்ம் அயூப் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் - கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 68 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசம், இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.