PSL 7: Wahab Riaz, Haider Ali, Wasim Akram test positive for coronavirus (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடந்துவருகின்றனர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இத்தொடர் நாளை மறுநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்குபெறும் பலருக்கு அடுத்தடுத்து கரோனா உறுதியாகிவருகிறது.
4 நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் 3 விக்கெட் கீப்பர்கள் மற்றும் 5 பயிற்சியாளர்களுக்கு கரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து 2 நாளைக்கு முன் பெஷாவல் ஸால்மி அணியை சேர்ந்த காம்ரான் அக்மல் மற்றும் அர்ஷத் இக்பால் ஆகிய இருவருக்கு கொரோனா உறுதியானது.