
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இத்தொடரில் இதுவரை 9 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 10ஆவது சீசனுக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
முன்னதாக இத்தொடரானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டு ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றதன் காரணமாக இம்முறை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்எல் தொடரின் 10ஆவது சீசன் எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கு வீரர்களுக்கான ஏலமானது கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி லாகூரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வாரனரை சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு கராச்சி கிங்ஸ் அணியானது ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையையும் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.