
Pujara says he does yoga, meditation to stay away from negative thoughts (Image Source: Google)
கரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அணி நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சட்டேஸ்வர் புஜாரா, கரோனா தொற்று அச்சத்தில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.