Advertisement

கவுண்டி கிரிக்கெட் 2022: அசத்தும் புஜாரா, வாஷிங்டன், சைனி!

கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா இரட்டை சதமும், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது அறிமுக போட்டிகளிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 21, 2022 • 18:46 PM
Pujara's Double Ton, Saini & Sundar's 5-Fer - Indians Shine In Ongoing County Championship
Pujara's Double Ton, Saini & Sundar's 5-Fer - Indians Shine In Ongoing County Championship (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். புஜாரா, வாஷிங்டன் சுந்தர், சைனி, உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

புஜாரா சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டி ஜூலை 19ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் சசக்ஸ் அணியின் கேப்டன் டாம் ஹாலண்ட் காயமடைந்தார். இந்நிலையில் வேறு இங்கிலாந்து வீரர்கள் இருந்தாலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த அந்த அணி நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது.

Trending


இந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 523 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் புஜாரா 231 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் புஜாரா சசெக்ஸ் அணிக்காக மூன்றாவது இரட்டை சதம் அடித்தார்.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது குணமடைந்தது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லேன்ஷைர் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயத்திலிருந்து குணமடைந்து சுழலுக்கு சவாலான இங்கிலாந்து மைதானங்களில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

இதே தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் கெண்ட் அணிக்காக ஒப்பந்தமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement