Navdeep saini
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முந்தினம் தொடங்கிய முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது 321 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக முஷீர் கான் 16 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 181 ரன்களையும், நவ்தீப் சைனி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மயங்க் அகர்வால் - கேப்டன் ஷுப்மன் கில் இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Navdeep saini
-
துலீப் கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷீர் கான்; நிதானம் காட்டும் இந்தியா ஏ!
இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: அசத்தும் புஜாரா, வாஷிங்டன், சைனி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா இரட்டை சதமும், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது அறிமுக போட்டிகளிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். ...
-
ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!
ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24