
Punjab Kings' Bishnoi Reveals Plans After Thrilling Win Over SRH (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் எளிய இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 120 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.