ஐபிஎல் 2021: அடுத்த சுற்றுக்குச் செல்ல நாங்கள் தகுதியான அணி தான் - விராட் கோலி!
நிச்சயம் அவர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தகுதியான அணி தான் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 39 ரன்களை குவித்தார். அதன்பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
Trending
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்த போட்டியில் அடைந்த மோசமான தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, "நாங்கள் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்தோம். ஆனால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று கூற முடியாது. அவர்களுடைய பவுலிங் சிறப்பாக இருந்தது என்று கூறவேண்டும்.
நிச்சயம் அவர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தகுதியான அணி தான். நாங்கள் இந்த போட்டியில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டோம். ஒன்று பேட்டிங்கில் 15 ரன்கள் வரை குறைவாக அடித்தது மற்றொன்று பௌலிங்-இன் போது இரண்டு பெரிய ஓவர்களை வீசியது. அதிலும் குறிப்பாக 22 ரன்கள் கிறிஸ்டியன் ஓவரில் சென்றது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த போட்டியில் சுனில் நரேன் சிறப்பாக பந்து வீசினார். அவர்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் சாகிப் மற்றும் வருண் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி மிடில் ஓவர்களில் எங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து விட்டனர். இதன் காரணமாக எங்களால் ரன் குவிக்க முடியாமல் போனது” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now