Advertisement
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குயின்டன் டி காக்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 22, 2024 • 12:54 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குயின்டன் டி காக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குயின்டன் டி காக்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஆடவர்  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய குயின்டன் டி காக் 22 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் டி காக்கும் 65 வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மில்லர் 43 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு  163 ரன்ளைச் சேர்த்தது. 

Trending


அதன்பின் சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. அதன்படி பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின் லிவிங்ஸ்டோன் 33 ரன்களில் விக்கெட்டை இழக்கம், மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஹாரி புரூக்கும் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியாததால், இங்கிலாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் குயின்டன் டி காக் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இப்போட்டியில் 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களையும் கடந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிககாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் படைத்தார். அவருக்கு முன் டேவிட் மில்லர் 100 சிக்ஸர்களை விளாசி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement