டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி
டிஎன்பிஎல் தொடரில் எல்பிடபிள்யு தீர்ப்பால் அதிருப்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெண் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி (Image Source: Google)
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக க்ள நடுவரிடம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால், அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்ததால், அஸ்வின் நடுவரின் முடிவில் அதிருப்தியாகி, கள நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு மேல்முறையீட்டு வாய்ப்பையும் இழந்திருந்தது.
Also Read: LIVE Cricket Scoreஇதனால் ரவிச்சந்திரன் அஸ்வினால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற அஸ்வின், பெவிலியன் திரும்பும் போது பேட்டால் தனது பேடில் பலமாக தாக்கியதுடன், பெவிலியனுக்கு சென்று தனது கிளவுஸையும் கழற்றி வீசினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.Ash அண்ணா Not Happy அண்ணாச்சி!
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar #TNPL #TNPL2025 pic.twitter.com/Csc2ldnRS3
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News