
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் ஜனவரி 25ஆம் தொடங்கியது. இப்போட்டியி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. இதையடுத்து விளையாடி இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 87, கே.எல்.ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80, அக்ஷர் 44 என அசத்தினார்கள்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி தங்களது பாஸ்பால் ஆட்டத்தை கையிலெடுத்து அதிரடி காட்டியது. ஆனாலும் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஒல்லி போப் சதமடித்து அசத்தியதுடன், ஆட்டநெர முடிவு வரை விக்கெட்டை இழக்காமல் 148 ரன்களைச் சேர்த்து களத்தில் உள்ளார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும், இந்திய அணியை விட இரண்டாவது இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்.
R Ashwin to Ben Stokes
— BCCI (@BCCI) January 27, 2024
What a delivery#TeamIndia | #INDvENG | @ashwinravi99 | @IDFCFIRSTBank pic.twitter.com/sxBGnhmhl0