ஆஸ்திரேலியாவுக்கு சுழற் பந்துவீச்சு தான் பலவீனம் - மதன் லால்!
ஆஸ்திரேலிய அணியின் பலவீனம் என்ன என்பது அந்த அணியின் அரை இறுதிப் போட்டியிலேயே தெரிந்து விட்டது. எனவே, அஸ்வினை ஆட வைத்தால் அந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் முன்னாள் இந்திய வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆறு போட்டிகளில் இந்திய அணி எந்த வீரரையும் மாற்றாமல் விளையாடி உள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் என சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய அணி.
அதே சமயம், லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அஸ்வினை ஆட வைத்தது. அந்தப் போட்டியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து இருந்தது. இந்தப் போட்டி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
Trending
அந்தப் போட்டியை தவிர அஸ்வின் வேறு எந்த உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அஸ்வின் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் மதன் லால், “ஆஸ்திரேலியாவுக்கு சுழற் பந்துவீச்சு தான் பலவீனம். அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சில் தடுமாறியது. குறிப்பாக தப்ரைஸ் ஷம்சி பந்துவீச்சில் ஆஸ்திரேலியா வீரர்கள் ரன்னே எடுக்காமல் பதுங்கினர். அதே போல, அஹ்மதாபாத் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்தியா அஸ்வினை ஆட வைக்கலாம். ஆனால், இந்தியா இதுவரை வெற்றி பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் அணியை தேவையின்றி மாற்ற விரும்ப மாட்டார்கள்” என கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. அப்போதும் சுழற்பந்துவீச்சில் தான் ஆஸ்திரேலிய பேட்டிங் தடுமாறியது. மேக்ஸ்வெல் மட்டுமே அந்த அணியில் சுழற் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடும் வீரராக இருக்கிறார். எனவே, அந்த அணியின் டேவிட் வார்னர் உள்ளிட்ட இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களுக்கு சிக்கலை கொடுக்கும் அஸ்வினை இந்திய அணி ஆட வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
Win Big, Make Your Cricket Tales Now