AUS vs IND, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம்?
அஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் ஆஸ்திரேலியா சென்றடைந்ததுடன், பயிற்சி ஆட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்கள் காயங்களில் இருந்து மீண்டதுடன் பயிற்சிக்கும் திரும்பினர்.
Trending
ஆனால் அதேசமயம் ஷுப்மன் கில்லின் காயம் மோசமடைந்ததன் காரணமாக அவரால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காப்பட்ட ரோஹித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு செல்லவில்லை.
மேலும் அவர் இன்னும் சில தினங்கள் தாது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவுசெய்ததன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார். மேலும்,ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர்கள் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இந்திய அணி பொதுவாக வெளிநாட்டு மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேவிற்கே அதிகளவிலான வாய்ப்புகள் வழங்கப்படும். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் இடம்பிடித்துள்ள் நிலையிலும், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவிற்கே முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டது.
Three Pacers + R Ashwin as lone spin bowling option + Nitish Reddy likely to be India's bowling attack!#AUSvIND pic.twitter.com/lFYto2d6QZ
— CRICKETNMORE (@cricketnmore) November 20, 2024
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் இந்தியா அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் எனும் முறையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அமையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் அஸ்வின் ம்ட்டுமே சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம்பிடிப்பார் என கூறப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மெட்செல்.
Win Big, Make Your Cricket Tales Now