Advertisement

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் இன்று முறைப்படி விண்ணப்பித்தார்.

Advertisement
Rahul Dravid applies for Team India head coach post, VVS Laxman likely to take over at NCA
Rahul Dravid applies for Team India head coach post, VVS Laxman likely to take over at NCA (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 26, 2021 • 09:30 PM

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் செயல்படப்போகிறார் என்ற கேள்வி சூடுபிடித்துள்ளது. தற்போது பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி, மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்காததால், அடுத்த பயிற்சியாளரை பிசிசிஐ அணுகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 26, 2021 • 09:30 PM

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி விலகியதில் இருந்து தற்போது வரை ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றிய போதும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Trending

வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ திவீரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாமல், இந்தியாவின் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு ராகுல் டிராவிட் சம்மதிக்கவில்லை. எனினும் பிசிசிஐ தலைவர் கங்குலி, நிச்சயம் இந்திய பயிற்சியாளர் தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இவரது பதவிக்காலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதாவது 2023 வரை தலைமை பயிற்சியாளராக இருப்பார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் இன்று முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஆம். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பித்தார். தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவரது அணியைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா ஆகியோர் ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டனர். அவரது விண்ணப்பம் வெறும் சம்பிரதாயம்தான்" என்றார்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

டிராவிட் தலைமைப் பயிற்சியாளரான பிறகு தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனில் கும்ப்ளேவும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படலாம்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement