
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான இந்திய அணியின் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் இந்திய அணியை வீழ்த்த, தென் ஆப்பிரிக்க அணி பலமிக்க படையை களமிறக்க உள்ளது. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க்கரம், யான்சன், வன் டீர் துஷன், டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுதான் அதிகம் எடுபடும். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற, அதிகளவில் வேகத்தை ஆடிப் பழக்கப்பட்ட அணிகள், இந்தியாவில் சுழலை சமாளிப்பது மிகவும் கடினம். இதுதான், இந்தியாவின் பலமாக இருக்கிறது.