டிராவிட் எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றவில்லை - பிரித்வி ஷா!
தனது பேட்டிங் ஸ்டைலில் டிராவிட் எதனையும் மற்றாவில்லை என இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் மற்றும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவர் தனது ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை ஊக்குவிக்கும் பணியை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் உருவாக்கியதில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா என பலர் தற்போது இந்திய அணியின் அடுத்த கட்ட தலைமுறை வீரர்களாக உள்ளனர்.
இந்நிலையில், தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாக இருந்த போது ராகுல் டிராவிட்டின் பயிற்சி குறித்து பிரித்வி ஷா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய பிரித்வி ஷா, “ராகுல் டிராவிட் எங்களுக்கு பயிற்சியாளராக இருந்த போது வீரர்களிடையே எப்போதும் ஒழுக்கத்தை மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார். எப்பொழுதும் வீரர்களிடையே ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் அவரை கண்டாலே எங்களுக்கு பயமாக இருக்கும்.
ஆட்ட நேரம் மற்றும் பயிற்சி நேரம் ஆகியவற்றை தவிர்த்து மற்ற நேரங்களில் நட்புணர்வுடன் இருக்கும் டிராவிட் இரவு உணவின்போது எங்களுடனே அமர்ந்து சாப்பிடுவார். அப்போதெல்லாம் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் அருகில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கும் . டிராவிட் உடன் இருப்பது ஒவ்வொரு வீரருக்கும் கனவாக இருக்கும் அந்த வகையில் நான் அவருடன் நேரத்தை செலவிடுவது மிகுந்த மகிழ்ச்சி.
அவர் பயிற்சியாளராக இருந்த போது எந்த ஒரு வீரரின் பேட்டிங் ஸ்டைலையும் மாற்றவில்லை. வீரர்களின் இயல்பான அணுகு முறையை பின்பற்ற சொல்வார். அதுமட்டுமின்றி நாங்கள் பேட்டிங்கில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் எங்களிடம் உள்ள திருத்தங்களை மட்டும் சரியாக சொல்வார். அதுமட்டுமின்றி போட்டியின் போது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும், அணியில் இருக்கும் போது வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அதிகம் பேசுவார்.
ஒவ்வொரு போட்டியின் போதும் நாங்கள் விளையாடுகையில் டிராவிட் எங்களை போட்டியை அனுபவித்து விளையாடும்படி அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். எதிரணியின் வியூகங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து நாங்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்தும் அதிகம் எங்களுக்கு சொல்லித் தருவார். அவரின் கீழ் பயிற்சி பெற்ற நாங்கள் நல்ல நம்பிக்கையை பெற்று தற்போது முன்னேறி உள்ளோம். ஒவ்வொரு வீரரிடமும் ராகுல் டிராவிட் தனிப்பட்ட அக்கறையுடன் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now