பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? - கங்குலி பதில்!
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக டிராவிட்டை நியமிப்பது குறித்து நாங்கள் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஷிகார் தவான் தலைமையிலான மற்றொரு இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடியது. இந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். எனவே இனி வருங்காலத்தில் ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக தொடருவார் என்று பலரும் நம்பி வருகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து அடுத்ததாக புதிய பயிற்சியாளரை நிச்சயம் இந்திய அணி தேர்வு செய்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Trending
ஏனெனில் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட டிராவிட் பல திறமையான வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கிய தந்ததால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, “டிராவிட் தற்போது வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட தயாராக இல்லை என்று தோன்றுகிறது. மேலும் நாங்களும் அவரிடம் இந்த பயிற்சியாளர் பதவி குறித்து எந்தவித ஆலோசனையையும் செய்யவில்லை. மேலும் அவரிடம் அவரது விருப்பத்தை கூட நாங்கள் இதுவரை கேட்கவில்லை அதற்கான நேரம் வரும் போது நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்பார்கள். அதுவரை நாம் காத்திருந்தான் ஆகவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now