
ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “கடைசி 2 ஓவர்கள் வரை நான் விளையாட திட்டமிட்டிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18ஆவது ஓவரில் நான் ஆட்டமிழந்தேன். அதனால் அது என் தரப்பில் இருந்து ஒரு தவறான கணக்கீடாகும். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் கடைசி 6 ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். வேறு பந்துவீச்சு விருப்பங்களை பயன்படுத்தி இருக்கலாம்.
ஆனால் குறை சொல்ல வேறு யாரும் இல்லை, நாங்களே அதை முடித்திருக்க வேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் வேறு ஏதாவது செய்திருக்கலாம். மேலும் இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் முதல் 10 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் அவர் தனது வேகத்தை அதிகரித்த விதம் விதம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. இது சிக்ஸர்கள் அடிக்கப்படும் மைதானம். விக்கெட் கொஞ்சம் தந்திரமாக இருந்தது, அதனால் நான் எனது ஷாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.