
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி! (Image Source: Google)
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியனது இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான சதத்தைன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதத்தையும், 35 பந்துகளில் ஐபிஎல் சதத்தியும் பூர்த்தி செய்து அசத்தினார். இந்த 14 வயது வீரர் தனது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என மொத்தமாக 101 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸின் மூலம் சூர்யவன்ஷி பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
டி20 போட்டியில் சதம் அடித்த இளம் வீரர்