
இந்தியாவில் பாரம்பரிய மிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மறுமுனையில் வழக்கம்போலவே அதிரடியாக விளையடைய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்தார். 195 பந்தில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 162 ரன்களை குவித்தார்.
அதேபோல் இப்போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 80 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். அதன்பின் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மும்பை அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, புஜாராவை போல மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் சிறப்பாக பேட்டிங் விளையாஇ இரட்டை சதமடித்தார்.