
சஞ்சு சாம்சன், திறமையான இளம் வீரராக இருந்தாலும், அவருக்கு போதிய வாய்ப்பு சீனியர் அணியில் கொடுக்கப்படவில்லை. சரியாக விளையாடாத ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கேரள ரசிகர்கள் பலரும் பிசிசிஐக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
இந்த நிலையில், ரிஷப் பந்த் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால், சஞ்சு சாம்சனுக்கு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் இன்று முக்கிய முடிவை எடுத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியிலிருந்து காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகினார்.
அதன் பிறகு தொடர்ந்து உள்ளூர் ஒருநாள் போட்டி, டி20 , ஐபிஎல் என இந்த மூன்று தொடரிலும் மட்டும் தான் கவனம் செலுத்தினார். தற்போது 3 ஆண்களுக்கு பிறகு சஞ்சு சாம்சன், ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கேரள கிரிக்கெட் வாரியம் சஞ்ச சாம்சனை ரஞ்சி கோப்பையில் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.