
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைத்தானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணி பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய் விஜய் சங்கரும் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 281 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 130 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மோஹித் ஹரிஹரன், முகமது, சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.