ரஞ்சி கோப்பை 2025: சதத்தை தவறவிட்ட சச்சின் பேபி; 342 ரன்களில் ஆல் அவுட்டானது கேரளா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது.

விதர்பா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை 2024-25 இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 138 ரன்களையும், சதத்தை நெருங்கிய கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹ்மத் இம்ரானும் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சல்மான் நிசார் 21 ரன்களையும், முகமது அசாருதீன் 34 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜலஜ் சக்சேனா 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கேரளா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிபப்டுத்திய தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now