
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி சுற்றுக்கு மும்பை, விதர்பா, குஜராத் மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இதில் மும்பையை வீழ்த்தி விதர்பா அணியும், குஜராத்துக்கு எதிரான போட்டியை டிரா செய்த கேரளா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 26) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேரளா அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் விதர்பா அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அதில் 20217-18, 2018-19ஆம் ஆண்டுகளில்சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறை இந்த இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான இறுதிபோட்டி குறித்த சில விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.