
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை மறுநாள் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கைப்பற்றும்.
அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று சரிவிலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.