முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட ரஷித் கான் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐசிசி சமபியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் 103 ரன்களையும், அணியின் கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ரம் தலா 52 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Trending
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அபாரமான சிக்ஸரை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர். அதன்படி இன்னிங்ஸின் 35ஆவது ஓவரை லுங்கி இங்கிடி வீசிய நிலையில் மூன்றாவது பந்தை ஷார்ட் லெந்தில் வீசினார். அதனை சரியாக கணித்த ரஷித் கான் ஸ்கோயர் கட் ஷாட் மூலும் பேக்வேர்ட் பாய்ண்ட் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.
First ball, first six! #RashidKhan sends a strong message. Afghanistan is here to fight! No backing down in this #ChampionsTrophyOnJioStar clash! #ChampionsTrophyOnJioStar Afghanistan South Africa | LIVE NOW on Star Sports 2 & Sports 18-1 pic.twitter.com/UzAR0Q0AkN
— Star Sports (@StarSportsIndia) February 21, 2025Also Read: Funding To Save Test Cricket
அதிலும் இப்போட்டியில் அவர் எதிர்கொண்ட முதல் பந்தும் அதுதான். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ரஷித் கானின் இந்த அபாரமான சிக்ஸரை கண்டு மெய்சிலிர்த்தனர். இதனால் ரஷித் கான் ஒரு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஃப்கானை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ரஷித் கான் விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now