
Rashid Khan Named As Captain Of Afghanistan T20I Team, Replaces Mohammad Nabi (Image Source: Google)
டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆஃப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷீத் கான், ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.