
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்திவுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. அதன்பின் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கனிஸ்தான் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.