
Rashid Khan Said Afghanistan Have More Than 1000 Leg Spinners Now! (Image Source: Google)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஜெய்ஷ்வால் விக்கெட்டிற்குப் பிறகு அணியே நிலை குழைந்தது. சாம்சன் மட்டும் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் அடித்தார். பின்னர் வந்தட் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஷித் கான் சுழலில் ராஜஸ்தான் அணியினர் ரன்கள் அடிக்க திணறினர். நூர் அஹமதும் சிறபாக பந்து வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 13.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரஷித் கான் 3 விக்கெட்டுகள் எடுத்த காரணத்திற்காக ஆட்ட நாயகன் விருது வென்றார்.