
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணியானது டிராவிஸ் ஹெட் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களையும் சேர்த்தனர். நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான் மற்றும் கீரென் பொல்லார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், மொனாங்க் படேல், டெவால்ட் பிரீவிஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் கீரென் பொல்லார்ட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் அந்த அணி 13.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Bowled'em #OneFamily #MINewYork #CognizantMajorLeagueCricket #MINYvWF pic.twitter.com/KrCfXghH8O
— MI New York (@MINYCricket) July 17, 2024