Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2024 • 03:11 PM

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 01, 2024 • 03:11 PM

அதேசமயம் ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

Trending

மேலும் ரஹ்மனுல்லா குர்பாஸ், அஸ்மதுல்ல ஒமர்ஸாய், முகமது நபி, நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், முஜூப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, குல்பதின் நைப், கரீம் ஜானத் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், ரஹ்மத் ஷா, ஹஸ்ரதுல்லா ஸஸாய் போன்ற வீரர்கள் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஃஃப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்

ரிஸர்வ் வீரர்கள்: செதிக் அடல், ஹஸ்ரத்துல்லா ஸசாய், சலீம் சஃபி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement